உதட்டை சுழித்து
முன் உந்தித்தள்ளி
முத்தமிடும் முன்
[ம்] என்று
’ம்’ காரம் இடுவாயே
அதுதான் எனக்கினிய
ரீங்காரம்
- அன்புடன் ஓம்
எந்த வார்த்தையிலும் இல்லாத தித்திப்பு இருக்கிறது அம்மு அம்முக்குட்டி அம்முச் செல்லம் என்று உன்னை
கொஞ்சும்போதும் கெஞ்சும்போதும்
- அன்புடன் ஓம்
Wednesday, 12 September 2012
செல்லக்குட்டி வெல்லக்கட்டி -7
குழந்தையாகிவிடுகிறோமே
என்ன விந்தை இந்த தருணங்களில்
நண்பனின் அன்பான வார்த்தைகளில்
தாயின் பாசத்தில்
காதலியின் அரவணைப்பில்
குழந்தையின் புன்னகையில்
தெய்வத்தின் பரவசத்தில்
-அன்புடன் ஓம்
Tuesday, 11 September 2012
sellakutti vellakkatti -6
இதற்கு இணையான சுகத்தை நான் எங்கும் கண்டதில்லையே குழந்தைகளை நெஞ்சோடு அணைக்கின்ற சுகத்திற்கு இணையாக - அன்புடன் ஓம்
செல்ல்க்குட்டி வெல்லகட்டி 5 [ கவலை]
ஏ கவலையே
நீ
எங்கே சென்று
ஒளிந்து கொள்கிறாய்
மழலை தேவதைகளாம்
குழந்தைகள்
அருகில் வரும்போது
- அன்புடன் ஓம்
செல்லக்குட்டி வெல்லக்கட்டி - 5என் மாளிகை அலஙரிக்கப்பட வேண்டும் குழந்தைகளின் புன்னகைகளால்
- அன்புடன் ஓம்
செல்லகுட்டி வெல்லக்கட்டி 4
தேன் தடவியிருக்கும் குழந்தையின் வார்த்தையிலும் காதலியின் வார்த்தையிலும் - anbudan om